பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி இருளிபட்டில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை சலுகைகளான ஊதிய உயர்வு, மருத்துவ சலுகைகள், பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
இந்த சலுகைகளை பத்தாண்டு காலமாக கேட்டு வந்தும் தொழிற்சாலை நிர்வாகம் கண்டு கொள்ளாத காரணத்தினால் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் தங்களை இணைத்து கிளை சங்கத்தை துவக்கி உள்ளனர். உடனே தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை சிஐடியு சங்கத்திலிருந்து வெளியேறும் படியும் அப்போதுதான் தங்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். பின்னர் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளனர்.
இதில் நான்கு தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்த காரணத்தினால் இந்த பழிவாங்கும் போக்கை கண்டித்து தொழிற்சாலையில் பணி செய்யும் 120 தொழிலாளர்களும் அவருடைய குடும்பத்தினரும் என மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment