திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்சிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரி ஆதித்தனார்.அரங்கில் பொன்னேரி வட்டார நாடார் சங்கத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவம்,எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், கண் மருத்துவமனை மற்றும் பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இசிஜி ஆகியவை பரிசோதனை செய்ய பட்டன முகாமில் பொதுச் செயலாளர் சின்னத்தம்பி நாடார் பொருளாளர் காமராஜ் நாடார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்ரீதர், சுபாஷினி,சாகித்யா, நிர்மலன், அழகம்மை, அக்சயா, சுஷ்மிதா மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment