சென்னை மாதவரம் ஆசிசி நகர் பிரதான சாலையில் பகுதியில் அமைந்துள்ள மாதவரம் பால் பண்ணை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஒன்றினை கட்டி உள்ளனர் உள்ளனர் இந்த கோயிலானது பால்பண்ணை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளதாகவும் அத்துடன் கோயில் கட்டுதல் சம்பந்தமாக எந்த ஒரு அனுமதியும் பால்பண்ணை நிர்வாகத்திடம் பெறப்படாமல் பால்பண்ணை நிர்வாகத்தால் கட்டப்பட்ட இடத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காம்பௌண்ட் சுவரையும் உடைத்து உள்ளே கட்டப்பட்டுள்ளதாக கூறி பால் பண்ணை நிர்வாகத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது தங்களின் வழிபாட்டுத் தலத்தை அகற்றக்கூடாது என்றும் தாங்கள் வழிபட்டு வருகிற கோயிலின் மீது மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு அறிவுறுத்தலும் இன்றி மக்களிடம் எந்த ஒரு விசாரணை மேற்கொள்ளாமல் அகற்றுவதாக கூறி 300க்கும் மேற்பட்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஆலயத்தின் முன்பு திரண்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு பால்பண்ணை பால்பண்ணை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் கோயில் இடித்து கோயில் இருந்த சிலையும் அகற்றப்பட்டது, இதனிடையே சிலையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்தின் தரத்தில் கூறப்பட்டுள்ள நிலையில் கோவில் இருந்த இடத்திலிருந்து சிலையை அகற்றக்கூடாது எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோயில இடித்த பொழுது பெண்கள் கதறி அழுது தங்கள் ஆலயத்தை இடிக்க கூடாது என தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்தனர், அதன்பின் கோயில் இடிக்கப்பட்டு அம்மன் சிலை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment