முன்னதாக இளைஞர் அணி தலைவர் வி.எம்.பாபு, செயலாளர் எம்.சங்கர் மாயா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். யாதவர் நலச் சங்கத் தலைவர் எம்.சரவணன், செயலாளர் என்.ஹரி, பொருளாளர் ஏ.வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஏ.ஆர். தர்மலிங்கம் யாதவ், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் கு.ரவி, மருத்துவர் முத்துலட்சுமி, பொன்னேரி கே.கோகுலசேகர், சர்மாநகர் ஓ.கே. முனியாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அழகுமுத்துக்கோன் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, சுதந்திரப் போராட்ட தியாகிளுக்கு மரியாதை செய்து கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகையும், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இளைஞர் அணி பொருளாளர் ரஞ்ஜித் நன்றி நவின்றார். இதில் பாடியநல்லூர் சுற்றுவட்டார யாதவர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment