80 லட்சம் மதிப்பீட்டிலான வலைகளையும் மீட்டுத் தரக்கோரி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் காலில் விழுந்து மீனவ பெண் கதறல் தங்களது வலைகளை மீட்டு தருமாறு தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என மீனவப் பெண் கதறல். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

80 லட்சம் மதிப்பீட்டிலான வலைகளையும் மீட்டுத் தரக்கோரி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் காலில் விழுந்து மீனவ பெண் கதறல் தங்களது வலைகளை மீட்டு தருமாறு தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என மீனவப் பெண் கதறல்.


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அரங்கங்குப்பம் மீனவ கிராமத்தில் நள்ளிரவில் அதிகாலை 2 மணி அளவில் 50க்கும் மேற்பட்டவர்களின் மீன் பிடி வலைகள் எரிந்து   80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் வலைகள் எரிந்து சேதமடைந்து அடைந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களிடம் மீன்பிடி வலைகளை எரிந்ததை பற்றி அப்பகுதி மீனவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அரங்குப்பம் மீனவ பெண்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் காலில் விழுந்து ஐயா எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் ஐயா எங்களுடைய குழந்தை குட்டிகள் படிப்புக்கு கூட செலவில்லாமல் தவிக்கிறோம் ஐயா எங்களை காப்பாற்றுங்கள் என காலில் விழுந்து அழும் காட்சிகளும் இருப்பவர்களின் நெஞ்சை பதற வைத்தது.


அதன் பின்னர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உடனடியாக இருப்பீடு வழங்கத் தருவதாக உழைப்பீடு பெற்றுத் தருவதாகவும் அப்பகுதி மீனவர்களுக்கு தெரிவித்தார் அதன் பின்பு அங்கு வந்திருந்த காவல்துறையினரிடம் இந்த குற்ற சம்பவ குறித்து உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாறும் கேட்டுக்கொண்டார் பின்னர் மீனவர்கள் தரப்பில் கூறுவதாக இப்பகுதியில் சமூகவிரோதிகள் அதிகமாக நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர்.


பழவேற்காடு பகுதி சுற்றுலா தளம் என்பதால் அனைத்து நபர்களும் வந்து செல்கின்றனர் யார் சமூக விரோதிகள் யார் செயலில் ஈடுபடுகிறார்கள் என தெரியவில்லை அதனால் அவர்களையும் கண்காணிக்க வேண்டும் என மீனவ பகுதி பெண்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad