பொன்னேரி ஜமாபந்தியில் அத்திப்பட்டு ஊராட்சி சார்பில் மனு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 June 2024

பொன்னேரி ஜமாபந்தியில் அத்திப்பட்டு ஊராட்சி சார்பில் மனு.


பொன்னேரியில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி துறை சார்பில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தின் ஜமாபந்தி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜுன் ஏழாம் தேதி தொடங்கப்பட்டு வருவாய் தீர்வாயம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது 11 வது நாளான இன்று  நாலூர் வண்ணிப்பாக்கம் மீஞ்சூர் நந்தியம்பாக்கம் அரியன் வாயல் வெள்ளம்பாக்கம், கொள்ளட்டி,கல்பாக்கம் எண்ணூர், அத்திப்பட்டு, பகுதியிலிருந்து பொதுமக்கள் பட்டா சிட்டா, நில அளவை, ஓ ஏ பி குடும்ப அட்டை   உள்ளிட்ட 315 பல்வேறு மறுக்கள் பெறப்பட்டு இதில் 15 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வழங்கப்பட்டன.

முன்னதாக அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த.40 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா, ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 50 பேருக்கு பட்டா, தாங்கல்நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ராஜீவ் காந்தி நகர் வண்டி பாட்டில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 545 குடும்பங்களுக்கு பட்டா, அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியில் 300 பேருக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா  உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை  அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி துணைத் தலைவர் எம் .டி .ஜி. கதிர்வேல் ஜமாபந்தி அதிகாரியிடம் மனு அளித்தார். மனுவை பெற்று கொண்டு ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்தார்.


இதில் வட்டாட்சியர் மதிவாணன் தனி வட்டாட்சியர் மோகனரங்கம் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன் வருவாய் ஆய்வாளர்  அலுவலக உதவியாளர்  எத்திராஜ் மற்றும் அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad