ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு டிஜிட்டல் லேப் திறப்பு விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 June 2024

ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு டிஜிட்டல் லேப் திறப்பு விழா.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெய் கோபால் கரோடியா அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில்  1500:க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர், இந்நிலையில் மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்க சமுதாய சிந்தனையோடு  மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் சார்பில் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ப்ராஜெக்ட் குரு கூல் திட்டத்தின் கீழ், 37 லட்சம் மதிப்பில்  2 மோகினி சரோஜி டிஜிட்டல் லேப் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி தலைமை நடைபெற்றது. இதில் ரோட்டரி சென்னை மாவட்டம் 32,34, (2025-26) மாவட்ட ஆளுநர் வினோத் சரோகே, உஷா வினோத் சரோஜா, ரோட்டரி உறுப்பினர்கள் வினோத்கர்க், சங்கீதா கர்க், சரவணன் புனிதா மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடி அனைவரும் நன்கு படிக்க வேண்டும் எனவும் ரோட்டரி மூலமாக அநேக உதவிகளை செய்து தருவதாகவும் அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என தெரிவித்தனர் குளிரூட்டப்பட்ட இரண்டு அறைகளில் 60 கம்ப்யூட்டர்கள், இருக்கைகள், ஏசி, திரைகள், கம்ப்யூட்டர்  புத்தகங்களை  ஆகியவற்றை பார்வையிட்டனர் முன்னதாக பள்ளி மாணவர்களின் சிலம்பம் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிகள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


ரோட்டரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மாணவர்கள் அனைவரும் ரோட்டரி கிளப் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad