திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி துறை சார்பில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தின் ஜமாபந்தி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜுன் ஏழாம் தேதி தொடங்கப்பட்ட வருவாய் தீர்வாயம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது, நேற்று 7வது நாளாக தடபெரும்பாக்கம், பொன்னேரி திருப்பாலைவனம், பழவேற்காடு, கரிமணல்பாக்கம், கணவன்துறை, சிருலப்பாக்கம், அவுரிவாக்கம் பகுதியில் இருந்து பொதுமக்கள் பட்டா சிட்டா, நில அளவை, ஓஏபி உள்ளிட்ட 172 பல்வேறு மறுக்கள் பெறப்பட்டு 4 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வழங்கப்பட்டன.
மீதமுள்ள மனுக்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார் இதில் வட்டாட்சியர் மதிவாணன், அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment