புழலில் தெருவில் தவறவிட்ட மூன்று சவரன் தங்க நகையை 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த புழல் காவல் நிலைய போலீசார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 June 2024

புழலில் தெருவில் தவறவிட்ட மூன்று சவரன் தங்க நகையை 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த புழல் காவல் நிலைய போலீசார்.


புழல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அனிதா ( வயது 34 ) அவரது கணவர் பழனி இவர் சோபா பெட்டிங் மார்ட்டில் பணிபுரிந்து வருகிறார் .  இன்று காலை இவர்கள் செங்குன்றத்தில் உள்ள திருமண விழாவிற்கு சென்று விட்டு இன்று காலை புழல் கேம்ப் அருகே பஸ்ஸில் வந்து  இறங்கி வீட்டுக்கு சென்றதும் இவர்கள் வைத்திருந்த கைப்பையில் இருந்த மூன்று சவரன் நகை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டு இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகரை பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் புகாரி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து தேடி வந்தனர் அப்போது  அங்கு கேட்பாரற்றுக் கிடந்த சிறிய பையை பிரித்து  பார்த்ததில் மூன்று சவரன் நகை பத்திரமாக இருந்தது அதனை  புழல் காவல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் இன்ஸ்பெக்டர் புகாரி மற்றும் போலீசார் உரியவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் நகை கிடைத்த மகிழ்ச்சியில் போலீசாருக்கு தனது நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad