70 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 3 பேர் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 June 2024

70 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 3 பேர் கைது.


புழலை அடுத்த விநாயகபுரம் பகுதியில் கடந்த 20/5/2024 அன்று வீட்டில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது 70 சவரன் நகை மற்றும் ஒன்றரை கிலோ  வெள்ளி பறிமுதல்



புழலை எடுத்த விநாயகபுரம் வி எம் கே நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவருடைய மனைவி ஹேமாவதி வயது 54 இவர் கடந்த 20. 5. 2024 அன்று புழல் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அளித்தார் புகாரில் தான் வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய மகள் திருமணத்திற்காக உறவினருக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்த நிலையில் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளிருந்த 70 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.


இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர் இதனை அடுத்து புழலில் இருந்து பாடி வரை சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் தென்பட்ட காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.


இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை வைத்து மூன்று இளைஞர்களை கைது செய்தனர்  அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிவா என்கின்ற வண்டு வயது 21 மற்றும் அவரது கூட்டாளிகள் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் வயது 20 மற்றும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா வயது 19 ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் ஹேமாவதி இல்லத்தில் திருடியதை ஒப்பு கொண்டதோடு அவரிடமிருந்து 70 சவரன் நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கையக படுத்தப்பட்டது இவர்கள் இந்த நகைகளை மண்ணில் புதைத்து பாதுகாத்து வைத்திருந்தது தெரியவந்தது, இதனை எடுத்து அவர்களிடம் இருந்து கையகப்படுத்திய நகைகளை ஆய்வு செய்த போலீசார் ஹேமாவதி வீட்டில் கொள்ளை அடித்ததில் 29 அரை சவரன் நகை மட்டுமே தங்கம் என்றும் மீதம் முள்ளவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது.


இதனை அடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களை சிறையில் அடைத்தனர், நகையகப்படுத்தப்பட்ட நகைகள் விசாரணை முடிவில்  ஹேமாவதி இடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad