40க்கு 40 வெற்றி பெற்றதை முன்னிட்டு திமுக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

40க்கு 40 வெற்றி பெற்றதை முன்னிட்டு திமுக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற திமுக காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தை மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர், இதை கொண்டாடுகின்ற வகையில் மாதவரம் மண்டலம் மாநகராட்சி புழல் அடுத்த கதிர்வேடு 31 வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமையில் கதிர்வேடு பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் காமராஜர் ராஜீவ் காந்தி ஆகிய திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு லட்டுக்களை வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள்.

இதில் மத்திய சர்க்கிள்  காங்கிரஸ், தலைவர் மாதவரம் வெங்கடேசன் 31 வது வார்டு திமுக நிர்வாகிகள் கதிர் குமார், பொன் சதீஷ்குமார், மார்ட்டின், எம்ஜிஆர் நகர் சரவணன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு மகத்தான வெற்றியை கொண்டாடினார்கள், இதேபோல் புழல் காவாங்கரை செங்குன்றம் பாடியநல்லூர் சோழவரம் வடகரை விளாங்காடுப்பாக்கம் புள்ளி லைன் தீர்த்தங்கரையம்பட்டு சென்றாம்பாக்கம் கிரான்ட் லைன் அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு லட்டுக்களை வழங்கி வெற்றிகளை கொண்டாடினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad