தமிழக அரசு பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சத்தியவேடுக்கு சென்று கொண்டிருந்தது இன்று காலை 7 மணி அளவில் சோழவரம் பைபாஸ் சாலை சென்றபோது அப்போது சாலையின் குறுக்கே ஒரு வாகனம் வந்தது பார்த்த பேருந்து ஓட்டுநர் எத்திராஜ்( 55 )பிரேக் போட்ட போது நிலை தடுமாறி பேருந்து சர்வீஸ் சாலையை விட்டு அருகில் இருந்து தனியார் பெட்ரோல் பங்க் சுவற்றில் இடித்ததில் பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி அருகே உள்ள வடக்கு நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா (45) சம்பவ இடத்திலேயே தலையில் படுக்காயம் அடைந்து இறந்து விட்டார் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காயமடைந்து ஐந்து பேரையும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment