சென்னை இரட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள mariden தனியார் மருத்துவமனையில் வடசென்னையில் முதல்முறையாக புற்று நோய்க்கான ரேடியேஷன் ஆர் காலஜ் மருத்துவ மையம் துவக்கம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

சென்னை இரட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள mariden தனியார் மருத்துவமனையில் வடசென்னையில் முதல்முறையாக புற்று நோய்க்கான ரேடியேஷன் ஆர் காலஜ் மருத்துவ மையம் துவக்கம்.


உலகம் முழுவதும் புற்று நோயின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்து வருகின்ற நிலையில் புற்று நோய்க்காக பலதரப்பட்ட ஆய்வுகள் மூலம் பலதரப்பட்ட மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகிறது, இதன் தொடர்ச்சியாக ரேடியேஷன் ஆக் காலஜ் சிகிச்சை முறை மூலம் புற்று நோய்க்கு தீர்வு காணும் முறையும் பல்வேறு மருத்துவமனைகளில் நடைமுறையில் இருக்கின்றன ஆனால் வடசென்னை பொறுத்தவரை இதுவரை எந்த மருத்துவ மனைகளிலும் லேசர் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்பொழுது சென்னை மாதவரத்தை அடுத்த இரட்டை ஏரி பகுதியில் அமைந்துள்ள maridan தனியார் மருத்துவமனையில் இந்த ரேடியேசன் ஆர் காலஜ் கதிர்வீச்சு மூலமாக புற்றுநோய் சிகிச்சை முறைக்கான மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது இதன் துவக்க விழா இன்று இரட்டை ஏரி பகுதியில் மெரிடின் மருத்துவமனையில் நடைபெற்றது


புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் செழியன் அவர்கள் கலந்து கொண்டு  ரேடியேஷன் ஆர் காலஜ் புற்றுநோய் மருத்துவ அதிநவீன மருத்துவ மையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார், இதில் புற்றுநோயின் சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad