இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளதாலும் இவர்கள் கூலி தொழில் செய்பவர்கள் என்பதாலும் இவர்கள் பயன்பெறும் விதத்தில் கவிதா நாராயணன் அவர்கள் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது.
10 வருடங்களாக சரிவர பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டிடம் ஆனது பராமரிப்பு இன்றி கட்டிடத்தின் மேல் பூசப்பட்டுள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்து பெயர்ந்து கட்டிடம் முழுமையாக சிதலமடைந்துள்ளது, அத்துடன் கட்டிடத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த கட்டிடத்தை சுப நிகழ்வுகளுக்காக பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்
அத்துடன் கட்டிடத்தின் உள் குப்பைகள் மாநகராட்சி உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது கட்டிடம் முழுமையாக சிதலம்அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் இந்த கட்டிடத்தை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment