சென்னை புழல் காவாங்கரை மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பில் இருந்த போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் சிறுசிறு பாக்கெட்டுகளில் கஞ்சாவை கொடுத்ததை கண்டுபிடித்தனர்.
உடனே அந்த நபரையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் அவர் திருநீலகண்டநகர் பிரதான சாலை சேர்ந்த முத்துராஜா (வயது 26) என்பது தெரியவந்தது, பின்னர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இவர் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி விற்பனை செய்கிறார் எனவும் கடத்தி வரப்பட்ட தான் எனவும் இதற்கு பின்னனியில் யாரும் தூண்டுதலாக இருக்கின்றார்களா என்பது போன்ற விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங், முத்துராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
No comments:
Post a Comment