வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 April 2024

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்.


வில்லிவாக்கம் தமிழக அரசு வீட்டு வசதி வாரியத்தால் 18 அடுக்கு மாடி கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கட்டிடத்தின் சொந்தமான இடங்களை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்.


வில்லிவாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வில்வம் டவர்ஸில் 18 அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் அப்பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவனம் தங்களது இடத்தை கையகப்படுத்த இருப்பதால் அதனை அரசு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை. 

பதினெட்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக 430 சதுர மீட்டர் கையகப்படுத்துவதாக மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் கூறுகின்றனர். இந்த குடியிருப்பில் 324 குடும்பங்கள் 1300 நபர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இதில் எங்களுடைய குழந்தைகள் விளையாடுவதற்கோ முதியோர் நடை பயிற்சி செய்ய வசதி இல்லாத நிலையும் இருசக்கர வாகனங்களும் மருத்துவ வசதிக்காக எந்த ஒரு வாகனமும் வந்து செல்ல முடியாமல் இருக்கின்ற இடத்தை தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிலத்தை கையகப்படுத்த உத்தேசித்திருப்பதை மறுபரிசீலனை செய்து மாற்றிடம் தேர்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை வலியுறுத்தினர்.


மேலும் அரசின் மக்கள் நலத்திட்டங்களை வரவேற்பதாகவும்  இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிப்படையும் என்பதாலும் 18 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிப்படையும் என்பதாலும். அடுக்குமாடி கட்டிடத்தில் முன்பு நின்று மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதோடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இதற்கு தக்க நீதி வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டு கோரிக்கை விடுத்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad