மூலக்கடை பகுதியில் ஆட்டோ சங்கம் அமைப்பதில் பிஜேபி மற்றும் திமுகவினர் மோதல் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 May 2024

மூலக்கடை பகுதியில் ஆட்டோ சங்கம் அமைப்பதில் பிஜேபி மற்றும் திமுகவினர் மோதல் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.

சென்னை மாதாவரம் மூலக்கடை பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் ஆட்டோ சங்கம் அமைப்பதில் பிஜேபி மற்றும் திமுகவினர் மோதல் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டதால் பொதுமக்கள் அச்சம்.


சென்னை மாதவரம் மூலக்கடை ரவுண்டானா அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகில் திமுக மற்றும் அதிமுக ஆக்கிய கட்சிகளின் ஆட்டோ நிறுத்தங்கள் அமைந்துள்ளன இதற்கு முன்பு இந்த பகுதியில் டிஜே ஆட்டோ சங்கம் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிஜேபியின் ஆட்டோ சங்கம் தற்காலிகமாக அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆட்டோ சங்கங்கள் அங்கு அமைக்கப்பட்டன.


அப்பகுதியில் மீண்டும் பிஜேபியின் ஆட்டோ சங்கம் சேர் பலகை திறப்பதற்காக இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் பிஜேபியின் பெயர் பலகையை பிஜேபி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் அப்பகுதியில் கொண்டு வந்து வைத்த பொழுது திமுக ஆட்டோ சங்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது இதில் பெயர் பலகை திமுக ஆட்டோ சங்கத்தினர் கீழே தள்ள முயற்சித்த பொழுது பெயர் பலகை கீழே விழாமல் பிஜேபி ஆட்டோ சங்கத்தினர் பழகி தாங்கி பிடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நடுசாலைக்கு சென்றனர். வழியாக சென்ற வாகனங்களின் மீதும் பொது மக்களின் மீதும் அவர்கள் விழுந்ததில் பொதுமக்கள் அச்சத்தில் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.


அத்துடன் தாக்குதல் நடந்து கொண்டிருந்த பொழுது கூட்டத்திலிருந்து ஒருவர் பட்டாசினை கூட்டத்தின் நடுவில் கொளுத்தி போட்டதில் சிலர் காயம் அடைந்தனர், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் ஆட்டோக்கள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது அத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பொது மக்களுடைய அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், ஆட்டோ சங்கத்தினர் ஒருவரை ஒருவர் மார்ச் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad