இந்த நிலையில் திவ்யா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் அங்கு பணிபுரிந்த சீனிவாசன் என்பவர் உடன் பழகி வந்துள்ளார் இருவருடன் தகாத உறவு வந்த நிலையில் சீனிவாசன் தினமும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் அப்பொழுது திவ்யாவின் ஆறு வயது மகள் தேஜஸ் ஸ்ரீ இவர்கள் இருவரின் தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை சீனிவாசன் தேஜஸ்ரீ குளிக்கும் பொழுது தண்ணி மூக்குக்குள் சென்று விட்டதாகவும் இதனால் தேஜஸ்ரீ மூச்சு விட முடியாமல் இருப்பதாகவும் கூறிக்கொண்டு தேஜஸ்ரீ தூக்கிக் கொண்டு ஓடி உள்ளார் சீனிவாசன், இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் விசாரித்த பொழுது அவர்களுக்கு பதில் சொல்லாமல் சீனிவாசன் தேஜ ஸ்ரீயை தூக்கிக் கொண்டு ஓடி உள்ளார் இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவர் குடியிருந்த வீட்டிற்கு சென்று விசாரித்த பொழுது மேலிருந்து குழந்தை அழுது கொண்டே கீழ் வீட்டில் வந்து படுத்து கொண்டதாகவும் அங்கு வந்த சீனிவாசன் குழந்தையை தூக்கம் முயற்சித்த பொழுது குழந்தை அவரை பலமாக தாக்கியதாகும் கூறியுள்ளனர்
ஆனால் குழந்தை மிகவும் மூச்சு விட முடியாமல் இருந்துள்ளது இதனை அடுத்து குழந்தை குளித்துக் கொண்டிருந்த பொழுது மூக்கில் தண்ணி ஏறிவிட்டது என்று கூறி குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி உள்ளார் இதனை அடுத்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்
இது தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குழல் போலீசார் சீனிவாசனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குழந்தை மூக்கினுள் தண்ணீர் சென்றதால் இறந்ததா இல்லை சீனிவாசன் கொலை செய்தாரா என்ற நோக்கத்தில் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment