புஷ்பராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலை ஏதும் செய்யாமல் வீட்டிலேயே இருந்துவந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினையால் சண்டை ஏற்படும்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த புஷ்பராஜ் மனைவியிடம் சண்டையிட்டு அவரை கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் .தனது பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருந்த மாமியார் வசந்தி தனது வீட்டில் வசித்து வருவதை வெறுத்த புஷ்பராஜ் மனைவி வெளியே சென்றதும் போதையில் மாமியாரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டார் .
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த புஷ்பராஜ் திடீரென தனது மாமியாரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி சண்டையிட்டு கட்டையால் மாமியாரை தலையில் அடித்தார். இதனால் வசந்திக்கு பின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில், மயக்கமாகி கீழே விழுந்தார்.
இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகள் ஜான்சி தனது தாயாரின் தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்து மயக்கமாகி இருந்த நிலையை கண்டு அலறி துடித்தார் . பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றிய விவரம் மாதவரம் காவல் நிலையத்திற்கு தெரியப்பட்டதின் பேரில் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் சுடுகாடு அருகே தலைமறைவாக இருந்த புஷ்பராஜை இன்று காலை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment