நாளை நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலமாக வாக்குப்பதிவு சாவடி கழுக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ஒன்று முதல் 43 மண்டல அலுவலங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் திருவள்ளுர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.கண்ணன், மாதவரம் வட்டாட்சியர் வெங்கடாசலபதி பொன்னேரி வட்டாட்சியர் வின்சென்ட் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஒன்று முதல் 43 மண்டலங்களுக்கும் 475 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வீல்சேர் உட்பட அனைத்து உபகரணங்கள் லாரி மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment