கட்டப்பஞ்சாயத்தின் கூடாரமான காவல் நிலையம் குற்றவாளிகளுக்கு துணை போகும் திருவேற்காடு காவல் ஆய்வாளர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 April 2024

கட்டப்பஞ்சாயத்தின் கூடாரமான காவல் நிலையம் குற்றவாளிகளுக்கு துணை போகும் திருவேற்காடு காவல் ஆய்வாளர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பாரதி நகர் பார்க் அருகே 50 வயது தக்க பெண்மணி செல்வி என்பவர் தன் கணவனை இழந்து கையேந்தி பவன் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது இவர் உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது 28.03.2024. அன்று மாலை சுமார் ஆறு மணி அளவில் முருகன் என்ற நபர் அடியாட்களை வைத்து கொலை முயற்சி செய்ய முயன்றுள்ளார் அப்போது செல்வி 20 வயது தக்க ஒரு மகள் 15 வயது தக்க தங்கை மகன் மற்றும் கடையில் வேலை செய்யும் சமையல் மாஸ்டர் ஆகியோரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதை திட்டமிட்டு செய்துள்ளனர் அப்பொழுது ஒரு வழக்கறிஞரும் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் முருகனுக்கு எதிராக அனைத்தும் அங்குள்ள என செல்வின் மகள் கூறிய பின்பும் காவலர்கள் அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என மறுத்துள்ளனர் சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளன அவர்கள் செய்த அனைத்தும் பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர் தரப்பினர் சென்று காவல் நிலையத்தில் தாக்குதலும் நடத்தி விட்டுப் புகார் கொடுத்துள்ளனர் பின்பு பாதிக்கப்பட்ட செல்வி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அவர்களுக்கு சி எஸ் ஆர் எம் கொடுக்காமல் அலட்சியப்படுத்து காவல் நிலையத்திலிருந்து நீங்க போங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று கூறியுள்ளனர்.


பின்பு இரண்டு நாள் பிறகு வழக்கறிஞர்கள் சென்று ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை சிஎஸ்ஆர் கொடுக்கவில்லை என்று கேட்டபோது கார்த்திக் குமார் என்னும் காவலர் என்ன கொடுக்கணும்னு சட்டம் இருக்கா என்ன சிஎஸ்ஆர் எல்லாம் கொடுக்க முடியாது போங்க செத்தா வாங்க யாராவது என்று வழக்கறிஞர் இடம் கரராக பேசிய உள்ளாராம் பின்பு அங்குள்ள உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வேறு வழியே இல்லாமல் விசாரணை தொடங்கியுள்ளனர் விசாரணை தொடங்கிய போது பாதிக்கப்பட்ட செல்வியின் கடையில் சமையல் மாஸ்டராக இருக்கும் வெள்ளைச்சாமி வயது 55 அவரை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சரமாரியாக காவலர்கள் அடித்து உதைத்து ஆணுறுப்பின் மீது அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.


கேஸ் ஓப்போஸ் வாங்கி மரியாதை ஓடிப்போங்க இல்லைன்னா அடிச்சு சாவடித்து விடுவேன் என்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் கார்த்திக் கூறியுள்ளார் பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த செல்வி இடம் சென்று கார்த்திக் குமார் என்ன பெரிய புடிங்கியா யாரவது அடிச்சாங்கன்னு உனக்கு தெரியுமா சொல்லு இல்லையென்றால் உன்னை 20 வயது மகளை தூக்கி உள்ள போடுவேன் என்று அங்கே ஆவேசமாகவும் மிரட்டும் பாணியிலும் சத்தம் போட அதன் பிறகு அவருக்கு போன் வந்ததும் அங்கிருந்து பதறி அடித்து ஓடிள்ளார் காவலர்கள் விசாரணை என்ற பெயரில் அத்துமீறி நடந்துள்ளது அங்கே வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது சுமார் வெள்ளைச்சாமியை விசாரணை என்ற பெயரிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் என்ற பெயரிலும் இரவு 11 மணி வரை செல்வியின் மகள்களையும் பெண் வழக்கறிஞரையும் 15 வயது சிறுவனையும் காவல் நிலைய மாண்பை மீறி 11 இரவுமணி வரை வைத்து விசாரணை என்ற பெயரில் பல டார்ச்சர்கள் கொடுத்துள்ளனர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவதற்கு காரணம் இது போன்ற காவலர்கள் தான் என சமூக ஆர்வலர்கள் பேசிக் கொண்டுள்ளனர்.


திருவேற்காடு காவல் ஆய்வாளர் மீது பல புகார்களும் எழுந்துள்ளன ஆனால் அவருக்கு ஏதோ உயர் அதிகாரிகளின் கையில் வைத்துக் கொண்டு இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபடுகிறாராம் இவர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஆவடி காவல் ஆணையர்.

No comments:

Post a Comment

Post Top Ad