சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வபோது சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை காவலர்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. விசாரணை சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கழிவறையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 25கிராம் கஞ்சா, கண்கானிப்பு கோபுரம் அருகே கேட்பாரற்று கிடந்த 30கிராம் கஞ்சா சிக்கியது. இதனையடுத்து 55கிராம் கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment