செங்குன்றம் அடுத்த பாலவாயல் ஜெய் துர்கா நகர் குடியிருப்பு வாசிகள் காதலர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் அங்கு வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்கள் மனைவி கணவனுக்கு மாலை மாற்றிக்கொண்டு ரோஜா பூ, பூங்கொத்து கொடுத்தும் பரிசு பொருட்களை கொடுத்தும் தங்களது காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் இதில் வயது முதிர்ந்த தம்பதிகள் இளம் தம்பதியர் எவ்வாறு இன்பமாக வாழ்க்கையை நடத்த வேண்டும், வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்தும் மரியாதை கொடுத்தும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என அறிவுரைகள் கூறினர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment