அறநிலைத்துறையின் அலட்சிய செயல்கள் நோய் பரவும் அபாயம் தரிசனத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 12 February 2024

அறநிலைத்துறையின் அலட்சிய செயல்கள் நோய் பரவும் அபாயம் தரிசனத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு.


திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்குள்ளே செல்வதற்கு 250 மற்றும் பக்தர்கள் உள்ளே செல்வதற்கு 50 ரூபாய் 20 ரூபாய் என அறநிலை துறையால் சாமி தரிசனத்திற்கு வசூல் செய்வது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே போல் இலவச கழிப்பறை என்று பெயரில் அதை பராமரிப்பது இல்லை கழிப்பறை மட்டும் தான் இலவசம் தண்ணீர் இலவசம் இல்லை அறநிலைத்துறை அதிகாரிகளிடம் இதை கேட்டால் அலட்சியத்தோடும் அசால்டாகவும் பதில் கரண்ட் போயாச்சு தண்ணி வராது போய் கார்ப்பரேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துக்கோ என்ன நக்கலாக பதில் கூறினார்கள்.

கழிவறைக்கு நிறைமாத கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் உள்ளே செல்வதற்கே அச்சப்பட்டனர் ஏனென்றால் அந்த அளவிற்கு துர்நாற்றம் வீசியது அந்த துர்நாற்றத்தை தாண்டி உள்ளே செல்ல முடியாத சிலர் வெளியே சென்று மலம் கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதைக் கண்டு கொந்தளித்த சமூக ஆர்வலர்கள் சமூகநீதி சமத்துவம் சமதர்மம் என பேசும் திமுகவிற்கு இது எல்லாம் தெரியவில்லையா எதுக்குடா கோவில் உள்ளே மட்டும் வசூல் செய்தவர்கள் கழிப்பறைக்கு கூட அஞ்சு பத்து பிச்சை எடுத்துக்கோங்க பிச்சை போடுறோம் என ஆவேசத்துடன் கூறினார்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் இதே நிலைதான் என சிலரால் கூறப்படுகின்றன.


ஆனால் குறிப்பாக இந்த கோவிலுக்கு எதிரில் உள்ள கழிப்பறை நீண்ட நாட்களாக தண்ணீரே வரவில்லை என்பது அதன் பின்னர் தெரியவந்தது இதைத் தொடர்ந்து இந்து சம அறநிலைத்துறை அமைச்சர் அவர்களே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய போது பார்க்கிறேன் நான் பார்த்துக்கிறேன் என மட்டும் பதில் கூறினார் புனிதமான இடங்களில் இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் இருக்கும் வரை அந்த புனிதத்திற்கே தீங்கு தான் விளையும் இன்னும் பல அவல நிலை இங்கே நமக்கு தெரிய வந்தது குறிப்பாக தெப்பக்குளத்தில் சாக்கடை தண்ணீர் மற்றும் பக்தர்கள் குளிக்கும் குளியல் அறை தண்ணீர் என அனைத்தையும் தெப்பக்குளத்திலேயே திறந்த விடப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் குளம் முழுவதும் மிகுந்த அழுக்குடனும் தெரிகிறது துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர் இவ்வளவு அலட்சியத்தோடு செயல்படுமா  அறநிலையத்துறை.

No comments:

Post a Comment

Post Top Ad