இந்நிகழ்ச்சிகளில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று பணிகள் தொடங்கி வைத்தார்.அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் சிவகுமார் , ஒன்றிய பொறியாளர் சாவித்திரி , பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய செயலாளர் B.D.சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் P.R.ராஜேஸ்வரி ரவீந்திரநாத், முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமலை லோகநாதன், பள்ளிப்பட்டு ஒன்றிய குழு துணைச் சேர்மன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் S.E.முரளி சேனா, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் B.V.கதிரவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் B.D.குமரேசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் S.ஏழுமலை, ஒன்றிய கழக நிர்வாகிகள் P.கோவர்தணநாயுடு, R.மோகன், P.சுப்பிரமணியம், M.சிவகுமார், V.V.மணி, M.K.சுரேஷ், K.S.சிவா, V.வரால்நாயுடு, M.செல்வம், Kதேவராஜன், B.D.நெடுஞ்செழியன், S.S.பாஸ்கரன் , E.S.சுந்தரம், G.சிதம்பரம், M.மாரிமுத்து, E.மணி, M.K.சோமசுந்தரம், கோவிந்தன், G.விநாயகம், A.மகி, யுவராஜ்,கி.செ.K.குமார், கி.செ.S.D.ஏழுமலை, கொத்தகுப்பம் துணைத் தலைவர் ரமேஷ், கிளைச் செயலாளர் ரகு நாயுடு, மு.செ.முருகன், தலைவர்கள் அத்திமாஞ்சேரிபேட்டை வசந்த பிரகாஷம், கர்லப்பாக்கம் கிருஷ்சாந்த், துணைத் தலைவர் வெண்ணிலா சிவகுமார், கவுன்சிலர் பத்மாவதி கோவிந்தராஜன் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மத்திய ஒன்றியம் கொத்தகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகள் நேய உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், கர்லப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கர்லப்பாக்கம் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சத்து 35ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், அத்திமாஞ்சேரிப் பேட்டையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் தொகுதி மேம்பாட்டு நிதியயிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் கலையரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தாங்கல் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
No comments:
Post a Comment