திருவள்ளூர் வீரராகவர் சுவாமி கோவிலில் தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு வீர ராகவ பெருமாள் அருள் பாலித்தார்.
திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வைத்திய வீரராகவ சுவாமி கோவிலில் கடந்த நான்காம் தேதி தை பிரம்மோற்சவம் தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை கோபுர தரிசனம் கடந்த 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்தேறியது அதனை தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் திரு தேருக்கு எழுந்தருளிய வைத்திய வீரராகவ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமே தராய் குளக்கரை தெரு, வடக்கு ராஜ வீதி பஜார் தெரு சன்னதி தெரு தேரடி வீதி உள்ளிட்ட நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment