திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த தொழுவூர் கிராம நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலக்கின்றது, அந்த நீரை அப்பகுதி கால்நடைகள் குடிநீரை அருந்துகின்றன மேலும் சுகாதாரமற்ற நீரினால் கொசுக்களும் பூச்சிகளும் உற்பத்தியாகின்றது, அதனால் அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு பல்வேறு விதமான நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த குளத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டாலும் ஊராட்சி மன்ற தலைவர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது கேள்விக்குறியாக தான் உள்ளது, இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து இதனை உடனடியாக சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவித்துள்ளனர்.
No comments:
Post a Comment