திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை ஊராட்சியில் கடந்த 2009-ஆம் ஆண்டு தார் அமைக்கப்பட்டது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து மழை காலங்களில் தண்ணீர் தேங்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அந்த சாலையை அமைத்து தர புத்தாண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.


இந்த நிலையில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜான் அவர்களின் பெரும் முயற்சியில் திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 920 மீட்டர் தார் சாலை ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதனால் பகுதி செங்கரை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
No comments:
Post a Comment