வடமதுரை அரசினர்உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் புகையிலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

வடமதுரை அரசினர்உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் புகையிலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை வட்டம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடமதுரை கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள்புகையிலை விழிப்புணர்வு பேரணியை அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகுமரன் தொடங்கி வைத்தார்.



இந்த பேரணிவடமதுரை பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி  பல்வேறு சாலைகள் வழியாக பேரணி காந்தி சிலை அருகில் முடிவடைந்தது பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் புகையிலை,கஞ்சா,உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தையும் பொறித்த பதகை ஏந்தியும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கோஷ்ங்களை முழுங்கியபடி தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி

No comments:

Post a Comment

Post Top Ad