பெரியபாளையம் பஜார் வீதியில் போதைப் பொருட்களை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாராயம் கள்ள சாராயம் போலி மதுபானம் சில்லறை மதுபானங்கள் கஞ்சா மற்றும் போதை பொருள் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பேரணியை பெரியபாளையம் மது அமலாக்க பிரிவு துணை ஆய்வாளர் அனுமந்தன் தொடங்கி வைத்தார்.


பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகில் தொடங்கி விழிப்புணர்வு பேரணி வடமதுரை ஜங்ஷனில் முடிவடைந்தது பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் துணை ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment