ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2023

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா.


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி முன்னிலை வகித்தனர். இந்த ஜமாபந்தியில் மொத்தம் 648 மனுக்கள் பெறப்பட்டு 313 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. 


இதில் சார் ஆட்சியர்கள் பயிற்சி கேத்ரின் சரண்யா, சுபலட்சுமி, தனி வட்டாட்சியர் லதா, வட்ட வழங்கல் அலுவலர்  ரவி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்..ற சங்கம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வி.சுந்தர்ராஜ், ஊத்துக்கோட்டை வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் பிரகாசம், வட்ட பொருளாளர் ராஜூ, கிராம நிர்வாக அலுவலர் யுகேந்தர் உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.

No comments:

Post a Comment

Post Top Ad