திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வடமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருஞான சம்பந்த சுவாமிகள் திருக்கோயில் 71-வது ஆண்டு விழா முன்னிட்டு நேற்று காலை அபிஷேக ஆராதனையும், மாலை மங்கள இசையும், அபிஷேக ஆராதனையும், இரவு பொன் ஊஞ்சல் சேவையும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.


இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- திருவள்ளூர் மாவட்டா செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment