தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்தலைமையில் கிராமசபைகூட்டம்நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2023

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்தலைமையில் கிராமசபைகூட்டம்நடைபெற்றது.


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கோடுவெளி ஊராட்சியில்  கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.சித்ராகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து  விவாதிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் மற்றும் ஊராட்சி பல்வேறு பணிகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, பொதுமக்களின் கூறிய கருத்துகளை கேட்டுக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக அந்த குறைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார்.


இந்த கிராம சபைகூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் எ.கே.எம். சரத்குமார், வார்டு உறுப்பினர்கள் கே.வரலட்சுமி கமலக்கண்ணன், வழக்கறிஞர்ஆர்.பிரகாஷ், எம்.ரமேஷ், இ.பாரதிஏழுமலை, எம்.சண்முகப்பிரியாமதன், ஊராட்சி செயலாளர் ஜெ.தாட்சாயணி மற்றும் மற்றும் கிராம பெரியவர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad