தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாகரல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குமுதா செல்வம் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் மற்றும் ஊராட்சி பல்வேறு பணிகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது, பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சித் துணைத் தலைவர் எ.கலாநிதி, வார்டு உறுப்பினர்கள் கே.சரஸ்வதிகோதண்டன், பி.அஞ்சலாபூபாலன், ஜி.சுமதிகோவிந்தசாமி, வி.சுகந்திவரதன், வி.கீதாவெங்கடேசன், ஊராட்சி செயலாளர் பி.ஆதிமூலம் மற்றும் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ஜெ.அன்பழகி மற்றும் ஊர் பெரியவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment