திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் உட்பட்ட வடமதுரை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலைய வளாகத்தில் மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மின்சார வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் சார்பில் கோட்டத் தலைவர் ந.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கொடியினை கோட்ட பொறுப்பாளர் ஆ.அறிவழகன் கொடி ஏற்றி வைத்தார் மற்றும் காமராசர் படத்திற்கு மாநில இணை செயலாளர் கா.மகாலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார் உதவி பொறியாளர் பெரியபாளையம் அ.கார்த்திகேயன் மற்றும் கோட்ட நிர்வாகிகள் இரா.,சரவணன் வ.முத்து, உ.சுதாகர், க.வஜ்ரவேல், இரா.ஹேமநத்குமார், சூ.பார்த்திபன், தி.ராமகுமார், மற்றும் திருவள்ளூர் கோட்ட பொறுப்பாளர் கு.மகேஷ் நன்றி கூறினார் இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment