திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியின் சார்பில் திருமலை திருப்பதி செல்லும் தமிழக முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருத்தணி வழியாக திருமலை திருப்பதிக்கு சென்றார்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகள் சார்பில் திருத்தணியில் நகர நிர்வாகிகள் சார்பிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, திருத்தணி அதிமுக ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவருமான இ.என்.கண்டிகை ஏ. இரவி பூங்கொத்து கொடுத்து தெரிவித்தார் உடன் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டிடி சீனிவாசன் பொதட்டூர் பேட்டை பேரூராட்சித் தலைவர் ஏ ஜி ரவிசந்திரன் திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல் திருத்தணி L. T. ராஜ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கம் பொறுப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment