திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சங்கமம் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 May 2023

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சங்கமம் திருவிழா நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் கல்வி வளர்ச்சிக்கான அறிவுறுத்தலின்படி  பெற்றோர் ஆசிரியர்கழகத்தின் சார்பில் 1962 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் சங்கமத் திருவிழா அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.சம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


முன்னாள் தலைமை ஆசிரியர் அவர்கள் ரவிக்குமார் முன்னிலை வகித்தார் வரவேற்புரை நல்கினார், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவர் அ. ஏழுமலை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


பிரிதியஷா கல்வி குழுமம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெ.மூர்த்தி, இந்த நிகழ்ச்சியில் தணிகை ரியல் எஸ்டேட் எம் கே பி நகர் தொழிலதிபர் எம்.ஆர்.தென்னரசு, எல்லாபுரம் ஒன்றிய துணை பெரும் தலைவர் வழக்கறிஞர் கே.சுரேஷ், ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆ.சீனிவாசன், வட்டாட்சியர் கே.நடராஜ், ஊத்துக்கோட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மு.தமிழ்செல்வன், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிமேலாண்மை குழு தலைவிஎ.பத்மாவதி, பெரியபாளையம் வியாபரிகள் சங்கத் தலைவர்பா.தனசேகரன், திமுக ஒன்றியவை தலைவர் பி.என்.ரவிச்சந்திரன், பெரியபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இ.ராஜா, காங்கிரஸ் எல்லாபுரம் வட்டார தலைவர் வி.மூர்த்தி, வழக்கறிஞர் எ.எல்.விஜயன், தலைமை ஆசிரியை பி.ஹேமலதா, தலைமை ஆசிரியை பிசகிலா, தலைமை ஆசிரியர் செல்வி, ஓய்வு கிராம அலுவலர் எ.வெஸ்லி, கூட்டுறவு வங்கி ஓய்வு மோகன், பேட்டைமேடு ஏசுபாதம், நேதாஜி மக்கள் மன்றம் தேவராஜ்,ஆர்.ராமதாஸ், மு.திராவிடமூர்த்தி, ஆலப்பாக்கம்ஆறுமுகம், பேட்டைமேடு பார்த்திபன், புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெரியபாளையம் துணைத் தலைவர் எல்.சீனு, பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப் பள்ளி பெரியபாளையம் துணைச் செயலாளர் ஏ.ராஜாமுகமது, பெற்றோர் ஆசிரியர் கழக அரசு மேல்நிலைப்பள்ளி பெரியபாளையம் துணை செயலாளர் எல்.கீதாவேலு, மற்றும் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர்.க.கணபதி.


No comments:

Post a Comment

Post Top Ad