திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கல் கிராம், சீத்தஞ்சேரி காப்புக்காடுகளுக்கு அருகில், ப்ருதிவி நகரில் அமைந்துள்ள, நமது சிவலோக தியான வனத்தில் ஆதாரபீடத்துடன் கூடிய 12" அடி உயரத்தில்தியான நிலையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிவலோக மஹாதேவர் திருமேனியானது தருமமிகு சென்னை சிவலோகத் திருமடத்தின் மடாதிபதி தவத்திரு.வாதவூரடிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஈஸ்வர பீடம் இராஜராஜேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் குருசந்திரா அம்மையார் மற்றும் விவேகானந்தா பள்ளி நிர்வாகத்தார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வேத கோஷங்கள் திருமுறை விண்ணப்பம் மற்றும் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, அன்பர்கள் தங்களின் கரங்களால் மூலிகை திரவியங்களை மஹா ருத்ராக்கினி குண்டத்தில் சமர்ப்பித்து சிவலோக மஹாதேவர் பிரதிஷ்டை வழிபாட்டில் குடும்ப சகிதமாய் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- தமிழக குரல் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

No comments:
Post a Comment