திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கல் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் எல்.சுகந்திராணிலிங்கன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.திருமலைசிவசங்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.கணபதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பி.புவனேஸ்வரிபாலு, என்.மல்லீஸ்வரி நாகேஷ்வரராவ், எம்.சீனிவாசன், எ.வசந்தாஅருணாசலம், கே.காஞ்சனாபாரத்கண்ணன், வி.வசந்திவீரஜீன், வழக்கறிஞர் டி.கோட்டீஸ்வரன், என்.தன்ராஜ், ஊராட்சி செயலாளர் ஜெ.உமாபதி(பொறுப்பு) மற்றும் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.அலமேலு மற்றும் அரசு திட்ட பணிகள் குறித்தும் ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த கிராம சபையில் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment