திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வெங்கல் முதல் பெரியபாளையம் வரை சாலையின் குறுக்கே நீர்ப்பாசனத்திற்காக சிறு சிறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள் கட்டி முடித்த பின்பு அதனை சரியாக சீர் செய்யாததால் சாலையில் குண்டும் குழியுமாக ஏற்பட்டு இருசக்கரம் மற்றும் பிற வாகனங்களில் வருபவர்கள் விபத்துகள் ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரில் பெருமளவு விபத்துகள் ஏற்படுகின்றது இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment