திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெருமுடிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் சோபகிருது வருஷ பிரம்மோற்சவ விழா கடந்த 24ஆம் தேதி துவஜாரோஹனம் என்ற கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து யாளி வாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட சேவை, சந்திர பிரபை, ஹனுமந்த வாகனம், ரிஷப வாகனம், கற்பகவிருஷ்சம் வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான நேற்று காலை திருத்தேர் எழுந்தருளல் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை தர்மகத்தா ஸ்ரீ பி.எஸ்.கிரிதரன் அய்யங்கார், பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாலலட்சுமி வெங்கடேசன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சேதுராம் குமார், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment