திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.


பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் திமுக பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக நம்பாக்கம் ஊராட்சியில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை கூட்டம் பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆர்.குமரேசன் ஏற்பாட்டில் பூண்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கின்ற எம்.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.  


இதில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, பூண்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.கே.சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் வேணுகோபால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், தில்லைகுமார், ஒன்றிய அவை தலைவர் ராகவன், மாவட்ட பிரதிநிதிகள் கூனிப்பாளையம் ஆர்.ரகு, சீத்தஞ்சேரி எஸ்.நாகராஜ், டி.பி.புரம் சீனிவாசுலு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வேல்முருகன், குருமூர்த்தி, ஸ்ரீதேவி, ஒன்றிய பொருளாளர் நாகபூஷணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த தெருமுனை கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கல்வியாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். 


இந்த தெருமுனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் யூ.கோபி என்கின்ற கோவிந்தராஜ், கே.வெங்கடேசன், எஸ்.சிரஞ்சீவி, ஆர்.முரளி, எஸ்.இளையபாரதி ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

No comments:

Post a Comment

Post Top Ad