திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கோடுவெளி ஊராட்சியில் காரணியில் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கோடுவெளி ஊராட்சியில் காரணியில் நடைபெற்றது.


எல்லாபுரம் மத்திய ஒன்றிய இளைஞரணி திமுக  அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கோடுவெளி ஊராட்சியில் காரணியில் நடைபெற்றது.


திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய இளைஞரணி திமுக சார்பாக திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது. 


திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்   கோடுவெளி எம்.குமார், மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் கோடுவேளி ஊராட்சி மன்ற தலைவருமான கே.ஜி.அன்பு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்டத் துணைச் செயலாளர் வி.ஜே.சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் பி.ஜி.முனுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் நாகலிங்கம், உமா சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ஜி.பாஸ்கர், டி.பாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெங்கல் ரஜினி, கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முரளி, கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இதில் தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிடர் நல குழு செயலாளரும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி, திராவிடர் கழக துணை பொதுச்செயலாளரும் தலைமை கழக பேச்சாளருமான சே.மெ.மதிவதனி ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 


இந்த தெருமுனை கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார், எம்.காஞ்சனாமுனுசாமி, என்.எம்.விஜயகுமார், செ.ரா.சேகர், எஸ்.சார்லஸ், கன்னிகாபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு எம்.வேலன்,
குருவாயல் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெகன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய  கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


இந்த தெருமுனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளைஞரணி அமைப்பாளர் கே.என்.சரத்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் காரணி எம்.சத்தியா, எஸ்.இளவழகன், ஏ.கலாநிதி, பி.ஜி.எம்.நாகராஜ், புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். 


இந்த தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  கோடுவெளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் எ.கே.எம். சரத்குமார் நன்றி கூறினார்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

No comments:

Post a Comment

Post Top Ad