திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ரெட்டி குளம் தூய்மைப்படுத்தும் பணி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்(2) கீழ் புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது இந்த சின்ன ரெட்டி குளம் இதை 50-ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் இதை சீர் அமைப்பதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த குளத்தை ஆழப் படுத்துவதால் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளுக்கு தாகத்தையும் போக்க பயனுள்ளதாக அமையும் ஏன பொதுமக்கள் கருதுகின்றனர் இந்த திட்டத்தின் பணியை வருவதற்கு காரணமான திமுக ஒன்றிய கழக செயலாளர் ஜெ.மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கோ.காயத்ரி கோதண்டன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன், ஆகியோர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment