திருவள்ளூர் மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் சார்பாக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் நிறுவனரும் தலைவருமான பி.எஸ்.விஜயகுமார் கலந்து கொண்டு திருவள்ளூர் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் தலைவர் ஏ.வி.நவீன் குமார், செயலாளர் காண்டீபன், பொருளாளர் ஜெகதீஷ், ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர்கள் சரவணன், முருகன், ஈசி மெம்பர்கள் ரவிச்சந்திரன், வினோத் ராஜா, ஞானசேகர், பழனி, கௌதம், ஜெயபிரகாஷ், கார்த்திகேயன், பழனி, கங்காதரன், பாபு மற்றும் இன்ஜினியர் அசோசியேசன் நிறுவனர் தலைவருமான பி.எஸ்.விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.


பொறியாளர் கவுன்சிலிங் அமைக்க வேண்டும் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை நிர்ணயக் குழு அமைத்தல் குறித்து திருவள்ளூர் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு மிகத் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் வேலூர் அசோசியேசன் தலைவர்கள் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.
No comments:
Post a Comment