இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், ஜெ.மோகன்பாபு, கே.வி.ஆனந்தகுமார், ஆர்.தில்லைகுமார் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் எல்லாபுரம் ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் ஆ.சக்திவேல், கும்மிடிப்பூண்டி வெங்கடாஜலபதி, பூண்டி ஜான் என்ற பொன்னுசாமி, பேரூர் செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி அறிவழகன், பொன்னேரி ரவிக்குமார், ஆரணி பி.முத்து, ஊத்துக்கோட்டை அபிராமி குமரவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை கூட்டங்கள் மாவட்ட முழுவதும் ஒன்றிய நகர பேரூர் இளைஞரணி சார்பாக நடத்துவது குறித்தும் மற்றும் கட்சியின் ஆக்க பணிகளை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக் கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment