
இந்த இரண்டு நாள் மாநாடு "நிலைத்தன்மையை வாழ்வின் வழியாக்குதல்" என்ற தலைப்பில் நடைபெற்றது. சவீதா சட்ட மாணவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தியா குழு நிகழ்வை தலைமை தாங்கி நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் மாநில அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் எஸ்.ஜான் ஜே.ராஜா சிங் உட்பட பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்வேறு துறைகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அன்றாட வாழ்வில் அதன் மதிப்பை மேம்படுத்துவதும் விவாதிக்கப்பட்டது, மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த நிபுணர்களின் பேச்சுகள், விளக்கக்காட்சிகள் மற்றும் குழு விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மாநாட்டின் நோக்கமான நிலைத்தன்மை தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கிய பல அமர்வுகள் இடம் பெற்றன மற்றும் மாநாட்டின் நோக்கம் தொடர்பாக விழிப்புணர்வை வெளிப்படுத்திய சிறந்த பங்கேற்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தலைமைக் குழு மற்றும் கௌரவ பிரதிநிதிகள் விருதுகளை வழங்கினர். இந்த நிகழ்வினை தலைவர் திருமதி. எல் பிரியதர்ஷினி குற்றவியல் சட்டத் துறை தலைவர். சுற்றுச்சூழல் ஆய்வாளர், ஏற்பாட்டுக் குழ நிரஞ்சலக்ஷ்மி, சுகிதா ஸ்ரீ, மாதவ ஈஸ்வர், நிதிஷ் உடுபா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment