திருவள்ளூர் மாவட்டம் அதிமுக பூண்டி கிழக்கு ஒன்றியம் ஊராட்சி கச்சூர் ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் பி.எம்.பிரசாத் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர்.சென்சைய்யா, சிறுபான்மையினர் நல பிரிவு ஒன்றிய செயலாளர் சி.தமிழ்மணி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு கே.பிரதாப், ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளர் வி.விஜயகுமார், திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு எல்.எம்.சுரேஷ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எஸ்.வளர்மதி, கிளைச் செயலாளர்கள் கே.இ.பலராமன், எம்.முனுசாமி, இ.சந்திரன், எம்.பாலாஜி, ஜி.நரசிம்மன், வி.சிவைய்யா, மேலவை பிரதிநிதிகள் கே.எம்.சின்னதுரை, ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

No comments:
Post a Comment