திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் திருவள்ளூர் கிழக்கு வட்டார தலைவர் ஆர்.மதுசூதன் ராவ் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எஸ்சி.எஸ்டி பிரிவு வெள்ளியூர் அன்பு, வெள்ளியூர் ரோஸ், ஜெயராமன், கரிக்கலவாக்கம் ஜாக், மேலகொண்டையார் வேலு, வதட்டூர் செல்வம், வதட்டூர் பாபு, பங்கார நாயுடு, வெள்ளியூர் ராஜன், செம்பேடு செல்வம், எடமேடு ரவி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment