திமுக எல்லாபுரம் தெற்குஒன்றிய கழக சார்பில் இரண்டு ஆண்டு சாதனைகளுக்கு பொதுக்கூட்டம் பூரிவாக்கத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2023

திமுக எல்லாபுரம் தெற்குஒன்றிய கழக சார்பில் இரண்டு ஆண்டு சாதனைகளுக்கு பொதுக்கூட்டம் பூரிவாக்கத்தில் நடைபெற்றது.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம்  தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பூரிவாக்கத்தில்எல்லாபுரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர், திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர்களுக்கு இலவச சேலைகள் வழங்கி சிறப்புரையாற்றினார், திமுக அயலக அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் கன்னிகை ஜி.ஸ்டாலின், திமுக தலைமை கழக பேச்சாளர் பி.டி.சி.செல்வராஜ் கலந்து கொண்டு திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்கி உரையாற்றினார்.


இந்த நிகழ்ச்சியில்  வரவேற்புரை ஆற்றினர் ஒன்றிய துணை செயலாளர் அன்பு என்ற உதயகுமார், கிளை செயலாளர் என்.முனுசாமி, மணி, சுந்தரம், முன்னிலை வகித்தனர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், எ.தேவேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் டி.கே.முனிவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்டவர்த்தக அணி அமைப்பாளர் பி.தனசேகர், ஒன்றிய துணை செயலாளர் ஆர்.உதயசூரியன், பி.ராஜேஸ்வரி, ஒன்றிய பொருளாளர் கே.எஸ்.எம்.குப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கே.வி.வெங்கடாசலம், ஆர்.தணிகாசலம், கே.கண்ணபிரான், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.வீரமணிகண்டன், திருக்கண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் என்ற சத்யராஜ், இலக்கிய அமைப்பாளர் ஆர்.ரஞ்சித், மாணவரின் அமைப்பாளர் எஸ்.பிரேம்ராஜ், மாணவர் அணி துணை அமைப்பாளர் வி.கவியரசன், தினேஷ்குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் வி.முருகன், திருகண்டலம் கிளை செயலாளர் தியாகராஜன் மற்றும்  ஒன்றிபிரதிநிதிகள் நன்றி உரைநல்கினார், சந்திரகுமார், பாஸ்கர், இன்பவள்ளி, கோபி, நாகராஜ், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் என ஏராளமான மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 - திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad